மலிபன் பிஸ்கட் புடிங்!
- 15 - 20 மலிபன் பிஸ்கட்
- 500 மில்லிலீட்டர் பால்
- 3 மே.க கஸ்டட் பவுடர் (ஸ்ரோபெரி சுவை)
- 5 மே.க சீனி
தோய்ப்பதற்றகு:
- பால்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சீனி சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும் (4 மேசைக்கரண்டி பாலை கஸ்டட் பவுடருடன் சேர்த்துக் கலக்க தனியே எடுத்து வைக்கவும்)
- ஒரு கிண்ணத்தில் கஸ்டட் பவுடர், 4 மேசைக்கரண்டி பாலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பாலுடன் கஸ்டட் கலவை சேர்த்து நன்றாக கலந்து, கை விடாமல் இறுகி வரும் வரை கிண்டி, அடுப்பில் இருந்து புடிங் கலவையை இறக்கி ஆற விடவும்.
- பரிமாறும் கிண்ணங்களில் சிறிது புடிங் கலவையை விட்டு, அடுத்ததாக மலிபன் பிஸ்கடை பாலில் தோய்த்து புடிங் மேல் வைக்கவும். மறுபடியும் சிறிது புடிங் கலவையை விட்டு, அதன் மேல் மலிபன் பிஸ்கடை பாலில் தோய்த்து புடிங் மேல் வைக்கவும் (கிண்ணங்களில் விடும் போது புடிங்கில் ஆரம்பித்து புடிங்கிலேயே முடிக்கவும்).
- கிண்ணங்களில் விட்ட புடிங்கை ஒரு சில மணித்தியாலங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
- பரிமாறும் பொழுது விப்பிங் கிறீமால் அலங்கரித்து, பரிமாறினால் சுவையாகவும் அழகாகவும் இருக்கும்.
குறிப்பு:
Comments
Post a Comment