ருட்டி ப்ரூட்டி கேக்!
- 75 கிராம் ருட்டி ப்ரூட்டி* (-/+)
- 100 கிராம் பட்டர்
- 125 கிராம் சீனி (-/+)
- 150 கிராம் கோதுமை மா*
- 3 முட்டை
- 2 தே.க அன்னாசி எசன்ஸ் (-/+)
- 1 தே.க பேக்கிங் பவுடர் (-/+)
செய்முறை:
- ஒவனை 175° C யில் சூடேற்றவும்.
- ஒரு கிண்ணத்தில் ருட்டி ப்ரூட்டித் துண்டுகள் போட்டு, 1 மே.க மா சேர்த்துக்கொள்ள கலந்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் சீனியை சேர்த்து, கேக் அடிக்கும் கருவியால் நன்கு அடித்துக் கொண்டு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும் (விட்ட முட்டை நன்றாக அடித்துக் கலந்த பின்பே அடுத்த முட்டையை விடவும்). அடுத்ததாக அன்னாசி எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.
- மா மற்றும் பேக்கிங் பவுடரை, அரிதட்டினால் பட்டர் கலவைக்குல் 2 அல்லது 3 பிரிவாக அரித்து சேர்த்துக் கலக்கவும். மாவுடன் கலந்து வைத்த ருட்டி ப்ரூட்டித் துண்டுகளைச் சேர்த்துக்கொள்ள கலக்கவும்.
- பேக்கிங் தட்டில் (23 x17 செ.மீ) பேக்கிங் பேப்பரை வைத்து அதன் மேல் கேக் கலவையை ஊற்றி, அதன் மேல் சிறிது ருட்டி ப்ரூட்டித் துண்டகளை தூவவும்.
- கேக் கலவையை 175° C யில் 30 - 35 நிமிடம்கள் வேக விடவும். கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
கேக் தயார்!!!
குறிப்பு:
- ருட்டி ப்ரூட்டியுடன் கலந்து வைக்க, கேக்குக்கு எடுத்த மாவில் 1 மே.க மாவை எடுத்துக் கலக்கவும் அல்லது மேலதிகமாக 1 மே.க மா எடுத்துப் கலக்கவும். கேக்கின் மேலே அலங்கரிக்க சிறிது ருட்டி ப்ரூட்டித் துண்டுகளை மா சேர்க்காமல் எடுத்து வைக்கவும் அல்லது மேலதிகமாக ருட்டி ப்ரூட்டித் துண்டுகளை உபயேகிக்கவும்.
- ருட்டி ப்ரூட்டித் துண்டுகளை கேக்கலவையுடன் சேர்த்து ஓரளவு கலந்தால் போதுமானது. ருட்டி ப்ரூட்டித் துண்டுகளைச் சேர்த்த உடனேயே பேக்கிங் தட்டில் விட்டு வேக வைக்கவும் (ஒரே கேக் கலவையை கலந்து கொண்டிருந்தாலும் அல்லது பேக்கிங் தட்டில் விட்டு உடனே வேக வைக்காட்டியும், ருட்டி ப்ரூட்டித் துண்டுகள் கேக்கின் அடிப்படை பகுதியில் சேர்ந்துவிடும்).
Comments
Post a Comment