கோழிக்குருமா!






தேவையான பொருட்கள்:
மசாலா ஊறவைக்க தேவையானவை:
  • 1 கிலோ கோழி இறைச்சி
  • 2 மே.க மிளகாய்த்தூள்
  • 2 மே.க மல்லித்தூள்
  • 1/2 மே.க மஞ்சள் தூள் 
  • 1/2 மே.க கரம்மசாலா (இறைச்சி சரக்குத்தூள்)
  • 1 தே.க சின்னச்சீரகத்தூள்
  • 1 மே.க இஞ்சி உள்ளி விழுது
  • உப்பு (தேவையான அளவு)

அரைக்க தேவையானவை:
  • 200 மில்லிலீட்டர் பொரித்த வெங்காயம் 
  • 100 மில்லிலீட்டர் தேங்காய்ப்பூ 
  • 100 மில்லிலீட்டர் தயிர்
  • 15 கயூ / பாதாம்
  • 1 மேசைக்கரண்டி கசகசா
  • 1 மேசைக்கரண்டி பெருஞ்சீரகம் (விரும்பினால்)

தாளிக்க / கறிக்கு தேவையானவை:
  • எண்ணெய்  (தேவையான அளவு)
  • 1 தேக்கரண்டி சின்னச்சீரகம்
  • 1 பிரியாணி இலை
  • 1 துண்டு கறுவாப்பட்டை 
  • 5 ஏலக்காய் 
  • 5 கராம்பு 
  • 1 அன்னாசிப்பூ
  • 1/2 மேசைக்கரண்டி முழு மிளகு 
  • மல்லி இலை  (விரும்பினால்)
  • நீர்
  • உப்பு

செய்முறை:
 
  1. கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும். மசாலா பொருட்களைச் சேர்த்து கலந்து 30 நிமிடங்கள்  ஊறவைக்கவும்.
  2. வெங்காயத்தை நீளமாக வெட்டி, பொண்ணிறமாக பொரித்து, தேங்காய், கயூ, கசகசா மற்றும் தயிர் சேர்த்து  மிருதுவாக  அரைத்து வைக்கவும். 
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டுத் தாளிக்கவும். அதனுள் ஊறவைத்த கோழி இறைச்சியைச் சேர்த்து வதக்கி, மூடி 15 நிமிடங்கள் அவியவிடவும். அதன் பின்பு திறந்து எண்ணை வெளிவரும் வரை வதக்கவும்.
  4. கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர், அரைத்து  வைத்துள்ள தேங்காய் விழுது ஊற்றி நன்றாக கலக்கவும். தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து மூடி, நன்கு அவியவிடவும். கோழிஇறைச்சி நன்றாக அவிந்து, எண்ணை வெளி வர இறக்கவும். விரும்பினால் மல்லி இலை தூவி சோறு / சப்பாத்தி / பூரியுடன் பரிமாறலாம். 

சுவையான கோழிக்குருமா தயார்!

குறிப்பு:
1 டெசிலீட்டர் = 100 மில்லிலீட்டர்
250 மில்லிலீட்டர் = 1 கப்
335 மில்லிலீட்டர் = 1 சுண்டு

அண்ணளவாக கப்பில் அளந்தெடுப்பதென்றால்
  • ½ கப்புக்கு 1½ மே.க குறைவாக தேங்காய்ப்பூ எடுக்கவும்.
  • ¾ கப்பொரித்த வெங்காயம் எடுக்கவும்.  
  • விரும்பினால் ½ கப் தேங்காய்ப்பூ மற்றும் 1 கப் பொரித்த வெங்காயம் சேர்த்தும் அரைக்கலாம். ஆனால் கறி இறுக்கமாக வரும்.






Comments